අප සපයන සේවාවන්...

ඔබේ අවශ්‍යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.

අප අමතන්න

பாடசாலை மாணவர்களுக்கு "குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் " என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு செயலமர்வு 14.11.2019 ஆம் திகதி நெடுந்தீவு றோ .க.மகளீர் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூக சேவைகள் உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் றோ.க.மகளீர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் வழிநடத்தலில் , நெடுந்தீவு மத்தி றோமன் கத்தோலிக்க மகளீர் வித்தியாலய மாணவர்கள் மற்றும் சைவப்பிரகாச தரம் - 5 மாணவர்கள் முதல் தரம் - 8 வரையான மாணவர்களும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.

➤ முதியோர்கள் தொடர்பான சமூகத்தின் பொறுப்பு
➤ முதியோர் ஆரோக்கியம் மற்றும் நன்மதிப்பு
➤ முதியோர் பராமரிப்பில் சிறார்களின் பங்களிப்பு

போன்ற விடயங்கள் தொடர்பில்
➥ நெடுந்தீவு பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர்
➥ மனிதவளப் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும்
➥ பிரதேச கலாசார பிரிவு உத்தியோகத்தர்
ஆகியோர் இவ் விழிப்புணர்வு செயலமர்வினை திறம்பட நடாத்தியிருந்தனர்.

சர்வதேச சிறுவர்,முதியோர்,விசேட தேவையுடையோர் தின விழா நெடுந்தீவு பிரதே செயலர் திரு. F .C . சத்தியசோதி தலைமையில், பிரதம விருந்தினர் திரு .திருச்சிற்றம்பலம் விஸ்வரூபன் ( ஆணையாளர் நன்னடத்தை சிறுவர் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களம் - வடக்கு மாகாணம் ) சிறப்பு விருந்தினர் திருமதி சிவகுமார் ( இயக்குனர் A . V .R அறக்கொடை அமைப்பு ) கெளரவ விருந்தினர் திரு.பொன்னுத்துரை தயாபரன் ( ஓய்வுபெற்ற தபாலதிபர் - நெடுந்தீவு தபாலகம் ) ஆகியோரின் சிறப்பு வருகையில்,முன்பள்ளி சிறார்கள் , பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், முதியோர் கெளரவிப்பு மற்றும் பரிசில்கள் வழங்கல் நிகழ்வுகள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபதில் 23.10.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்ற நிகழ்வுகளின் பதிவுகள்.

தேசிய போதை ஒழிப்பு வாரம்  2019.06.23 - 2019.07.01

எமது பிரதேச செயலகத்தில் தேசிய போதை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலக முன்றலில் போதை ஒழிப்பு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தும் நிகழ்வு 21.06.2019 அலுவலக உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது. இந்த சுவரொட்டிகள் கிராம சேவையாளர் பிரிவுகளில் காட்ச்சிப்படுத்தப்படுகின்றமையும் போதை ஒழிப்பு தொடர்பான வீதி நாடகம் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

viber image 2019 06 21 09 43 58  viber image 2019 06 21 09 44 16 

viber image 2019 06 21 09 44 47  viber image 2019 06 21 09 45 20 

viber image 2019 06 21 10 59 51111  viber image 2019 06 21 10 59 51

viber image 2019 06 21 10 59 50  viber image 2019 06 21 10 59 49

 

பிரதேச மட்ட இலக்கியப்  போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் எமது பிரதேச செயலக பிரிவில் பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள் பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நெடுந்தீவு பிரதேச பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

20190609 050009 20190609 050150 

20190609 043116  20190609 045316

News & Event

23
ඔක්2026
சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் நெடுந்தீவுக்கு விஜயம்

சுற்றுச்சூழல் அமைச்ச...

“கிளீன் ஐலண்ட்” திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் 16.10.2026 அன்று நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) திட்டத்தின்...

23
ඔක්2026
உள்ளக அலுவல்கள் பிரிவு – பொதுமக்களுக்கான முறைப்பாட்டு பொறிமுறை

உள்ளக அலுவல்கள் பிரி...

பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU) முறைப்பாட்டு பொறிமுறை செயற்பாட்டிலுள்ளது. அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்,ஊழல் அல்லது...

23
ඔක්2026
மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம்

மூன்றாம் காலாண்டு கண...

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (2026.10.15) காலை 10.00 மணிக்கு மதிப்பிற்குரிய...

23
ඔක්2026
முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல்

முன்பள்ளிச் சிறார்கள...

முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவுத் திட்டத்தினை கண்காணித்தல் நெடுந்தீவு பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான காலையுணவு வழங்கும் திட்டத்தின் செயற்பாடுகளை உதவிப் பிரதேச செயலாளர் அவர்கள் இன்றைய தினம் (2026.10.14) நேரில் சென்று பார்வையிட்டார். முன்பள்ளிச் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் போசாக்கு நிலையை மேம்படுத்தும்...

23
ඔක්2026
சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி

சுற்றுலா சேவை வழிகாட...

சுற்றுலா சேவை வழிகாட்டி (Site Guide) பயிற்சி நெறி - முதலாம் நாள் ​வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டின் கீழ் வடபகுதியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் 07 நாள் சிறப்புப் பயிற்சிநெறி (Site Guide Training) இன்றைய தினம்(2026.10.14) உதவிப் பிரதேச...

23
ඔක්2026
முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி - 2026

முதியோர் பசுமை நல்லி...

ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரியானது நெடுந்தீவையும் வந்தடைந்தது. 1890 என்ற முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல், Clean Sri Lanka...

23
ඔක්2026
மாற்றுத்திறனாளிகளுக்கான மீளாய்வு அறிவித்தல்

மாற்றுத்திறனாளிகளுக்...

மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவினை பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் பின்வரும் ஆவணங்களுடன் எதிர்வரும் 2026.11.02 திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள மீளாய்வில் தவறாது கலந்து கொள்ளவும். 01) 06 மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ்கள் 02) அடையாள அட்டை 03) குடும்ப பதிவு அட்டை மீளாய்வில்...

23
ඔක්2026
"EDOTCO Smart Pole Tower திறப்பு விழா"

"EDOTCO Smart P...

நெடுந்தீவில் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட EDOTCO நிறுவனத்தின் 5G Smart Lamp Pole திறப்பு விழா, நேற்றைய தினம் (12.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன்,...

« »
Scroll To Top