இன்றைய தினம் வசப கடற்படை தளத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு - குறிகாட்டுவான் கடற்போக்குவரத்தில் அண்மைக்காலமாக பிரதேச மக்கள், அலுவலர்கள் மற்றும் சுற்றுலாவிகள் எதிர்கொள்ளும் பிரச்சனை குறித்து பிரதேசசெயலர் தெளிவுபடுத்தினார். மேலும் அன்றாட சேவையில் ஈடுபட்டுவந்த வடதாரகை, குமுதினி மற்றும் சமுத்திரதேவா படகுகள் சமகாலப்பகுதியில் சேவையில் ஈடுபடமுடியா நிலையில் மக்களின் இடர்பாடுகளை முடிவிற்குகொணரும் வகையில் வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி இதன்போது நம்பிக்கையை வெளியிட்டார். குறித்த சந்திப்பில் வடபிராந்திய கடற்படை தளத்தின் உயரதிகாரிகள் மற்றும் நெடுந்தீவு வசப கடற்படை தளத்தின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் ஊழியர் நலன்புரி சங்கமும் இணைந்து மிக விமர்சையாக நடாத்திய பிரதேச செயலக பொங்கல் நிகழ்வானது 2026.01.19 இன்று காலை பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது .
p><
<
நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் 2026ம் ஆண்டிற்கான வீட்டுத்திட்ட பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான கூட்டம் பிரதேசசெயலர் தலைமையில் இன்று (13 / செவ்வாய்) காலை இடம்பெற்றது. திட்டத்தில் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களையும் குறித்த திட்டத்தின்போது பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பான விளக்கத்தினையும் பிரதேசசெயலர் இதன்போது வழங்கினார். குறித்த கூட்டத்தில் உதவி பிரதேசசெயலர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
<
<
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா வருகின்ற மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கச்சதீவிற்கு பக்தர்களுடன் பயணிக்கும் படகுகளுக்கான தரப் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. கப்பல் கட்டும் வாணிப துறையினரால் வருகின்ற மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற திட்டமிடப்படும் தரப்பரிசோதனைக்காக தங்களுடைய படகுகளை உட்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். இதற்காக தங்களது படகு விபரங்களை பிரதேசசெயலகத்தில் பதிவுசெய்யுமாறும் கடந்த வருடம் தங்களது படகு சார்ந்து சுட்டிக்காட்டப்பட்ட தேவைப்பாடுகளை பூர்த்தியாக்கி தயார்நிலையில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
<














