நெடுந்தீவு பிரதேசசெயலக மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் சுகாதாரம் மற்றும் இளவயது திருமணம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு பிரதேசசெயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. பிரதேசசெயலர் உயர்த்திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார். குறித்த கருத்தமர்வில் நெடுந்தீவு கல்விக்கோட்ட பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
<
<
நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேசசெயலாளர் உயர்திரு ந. பிரபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய இளங்குமரன் அவர்களின் தலைமையில் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் (18/06/2026) இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் அடுத்துவரும் காலப்பகுதியில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள், அனுமதிகள் தொடர்பிலும் பிரதேச அமைப்புக்களின் முன்மொழிவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் திணைக்களங்களின் தலைவர்கள்,பிரதேசமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்
<
<
கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் செயற்திட்டத்திற்கு அமைவாக நோலன் கால்வாய் புனரமைப்பு வேலைகள் இன்று (18/06/2026) ஆரம்பித்துவைக்கப்பட்டது. நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு ந பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கௌரவ இளங்குமரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார். நிகழ்வில் கிராம மக்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்
<
<
நெடுந்தீவு மகளிரால் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கோடு மகளிர் உள்ளூர் உற்பத்திகளின் விற்பனை நிலையம் நேற்றைய தினம் (18/06/2026) திறந்துவைக்கப்பட்டது. பிரதேசசெயலர் உயர்திரு ந. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கௌரவ இளங்குமரன் அவர்கள் கலந்துகொண்டு விற்பனை நிலையத்தை திறந்துவைத்தார். மகளிர் உற்பத்திகளுக்கு நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்குவதோடு, அவர்களின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார சுயநிறைவை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்தத் திட்டம் அமைகிறது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 10 இலட்சம் ஒதுக்கீட்டின்கீழ் குறித்த செயற்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
<
<
நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின ஆரம்ப நிகழ்வு பிரதேசசெயலர் திரு N பிரபாகரன் அவர்களால் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் உதவி பிரதேசசெயலர் திரு சி.றஜிந்தன், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாயமட்ட அமைப்பின் தலைவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
<
<













