இவ் அடைவு மட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு உதவிய, எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு.சகாயநாதன் ஜனார்த்தனன் அவர்களுக்கு, அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (06.01.2026) இடம்பெற்ற நிகழ்வில் பாராட்டுப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.. குறித்த கெளரவம் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வட மாகாண சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன், பிரதேச செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் பங்குபற்றினார்கள்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன் அவர்கள் இன்றைய தினம் (05.01.2026) தனது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உதவி பிரதேசசெயலரை அன்புடன் வரவேற்று மகிழ்வதோடு அவரது பணி சிறப்புற அமைய வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம். புதிய உதவி பிரதேசசெயலர் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடமிருந்து தனக்கான நியமனக் கடிதத்தினைப் கடந்த 02.01.2026 அன்று பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் மழையுடன்கூடிய காலநிலையால் உண்டான கடல் கொந்தழிப்பு காரணமாக நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான கடல்வழி போக்குவரத்து இன்றைய தினம் முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல்வழி அம்புலன்ஸ் விரைவு படகும் பயணிக்க முடியாத நிலையில் விமானப்படையின் உலங்கு வானூர்தியை வரவழைக்கும் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. நோயாளரை விரைந்து அனுப்பிவைப்பதில் நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் முன்னெடுத்த ஏற்பாடுகளில் பிரதேசசெயலர் மற்றும் உதவி பிரதேசசெயலர் ஆகியோர் இணைந்திருந்தனர். மேலும் இவ்வாறான சீரற்ற காலநிலைகள் நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதேச மக்களை அவதானமாக செயற்படுமாறு பிரதேசசெயலர் அறிவுறுத்துகின்றார்.
p><
<
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு பூராகவும் நடாத்தபடும் தேசிய இலக்கிய போட்டிகளில் நெடுந்தீவு பிரதேசத்தை சார்ந்த இளம் எழுத்தாளர் திரு ஜேசுதாசன் ஜீவராஜ். அவர்கள் சிறுகதை ஆக்க படைப்பில் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தை தனதாக்கினார். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தபடும் தேசிய இலக்கிய போட்டிகளில் முதல்கட்டமாக பிரதேசமட்டத்திலும் இரண்டாம் கட்டமாக மாவட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தேசியமட்டத்திலும் போட்டிகள் நடாத்தப்படும். அந்த வகையில் பிரதேசமட்ட போட்டிக்காக திரு ஜேசுதாசன் ஜீவராஜ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட "முடிச்சுக்கள்" என்ற சிறுகதை திறந்த பிரிவில் பிரதேசமட்டத்தில் முதலாம் இடத்தினையும் மாவட்டமட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுகொண்டது. இதனை எழுதிய இளம் எழுத்தாளர் திரு ஜேசுதாசன் ஜீவராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
<














