நிலையத்தின் இணைப்பாளர் பிருந்தா கந்தையா அவர்களின் தலைமையில் இன்று (30/01/2026) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந. பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு நிலையத்தினூடாக கடந்த வருடம் பாடநெறிகளை பூர்த்தி செய்த 52 மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
<
<
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, விழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் வாகனங்களுக்கான புகைப்பரிசோதனை மேற்கொள்ளும் செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. பிரதேசசெயலக வளாகத்தில் இன்று மாலை வரையில் இடம்பெறும் குறித்த செயற்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.
<
<
திருவிழாவை முன்னிட்டு அங்கு பணியாற்றவுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து, அடுத்த வாரமளவில் இடம்பெறவுள்ள முன்னாயத்த களவிஜயத்தின்போது அவதானம்செலுத்த வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்தும் இப்பயணத்தின்போது அவதானிப்புசெய்தார். இவ்வேளையில் ஏற்கனவே அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதியையும் சந்தித்து விழா முன்னாயத்த பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
<
<














