ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரியானது நெடுந்தீவையும் வந்தடைந்தது. 1890 என்ற முதியோர் உதவிச் சேவைக்கான அவசர தொலைபேசி இலக்கத்தைப் பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்துதல், Clean Sri Lanka திட்டத்தை ஊக்குவித்தல், முதியவர்கள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல் போன்ற பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி, இக்குழுவினர் கடந்த 01ஆம் திகதி கொழும்பிலிருந்து தமது சைக்கிள் சவாரியை ஆரம்பித்து 2026.10.12 அன்று நெடுந்தீவை வந்தடைந்த இக்குழுவினர் நெடுந்தீவு மாவலித்துறைமுகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் வரவேற்கப்பட்டு தொடர்ந்து நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய முன்றலில் வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இச்சைக்கிள் சவாரியில் பங்கேற்ற முதியவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன், மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.ந.பிரபாகரன், உதவிப் பிரதேச செயலாளர், நெடுந்தீவு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நெடுந்தீவு முதியோர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் பராம்பரிய கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் மாட்டுவண்டில் சகிதம் பொதுமக்களும் இணைந்திருந்தனர்.
<

<

மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவினை பெற்றுக்கொண்டிருக்கும் பயனாளிகள் பின்வரும் ஆவணங்களுடன் எதிர்வரும் 2026.11.02 திங்கட்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள மீளாய்வில் தவறாது கலந்து கொள்ளவும்.
01) 06 மாதங்களுக்குள் பெறப்பட்ட மருத்துவச்சான்றிதழ்கள்
02) அடையாள அட்டை
03) குடும்ப பதிவு அட்டை
மீளாய்வில் கலந்து கொள்ள தவறுமிடத்து கொடுப்பனவு இடைநிறுத்தப்படலாம் என்பதனை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
தகவல் பிரதேச செயலாளர் - நெடுந்தீவு
<
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை நாட்டின் சுகாதார அமைச்சர் வைத்தியர் கெளரவ நளிந்த ஜதிஸ்ஸ அவர்கள் நெடுந்தீவு பிரதேசசெயலர் உயர்திரு N பிரபாகரன் அவர்களின் பிரதேசம் தொடர்பான தெளிவுபடுத்தல்களுடன் குறித்த அவதானிப்பை மேற்கொண்டார். வைத்தியசாலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் பிரதேச வைத்திய பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிய கெளரவ அமைச்சர் அவர்கள், தீவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசிய தேவைகள் தொடர்பிலும் பிரதேசசெயலரிடம் இதன்போது கேட்டறிந்துகொண்டார்.
<

நெடுந்தீவில் நவீன தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட EDOTCO நிறுவனத்தின் 5G Smart Lamp Pole திறப்பு விழா, நேற்றைய தினம் (12.10.2026) திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.க.இளங்குமரன், மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு.ந.பிரபாகரன், EDOTCO நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். நெடுந்தீவின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் இணைப்பை வலுப்படுத்துவதற்கும் இத்திட்டம் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைகின்றது. இத்தகைய நவீன தொழில்நுட்ப வசதிகள் தீவக மக்களின் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்துவதுடன், அரச நிறுவனங்களின் சேவைகள், மாணவர்களின் இணையவழிக் கல்விச் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சி ஆகியவற்றுக்கும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
<

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் கியூமெடிக்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் முதலுதவி தொடர்பான இருநாள் பயிற்சிநெறி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது. குறித்த பயிற்சி நெறியில் பிரதேச இளையோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சியின் நிறைவில் இவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டனர்.
<
<













