Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Event.
“கிளீன் ஐலண்ட்” திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் 16.10.2026 அன்று நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டனர். இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் “கிளீன் ஸ்ரீ லங்கா” (Clean Sri Lanka) திட்டத்தின் ஓர் அங்கமான “கிளீன் ஐலண்ட்” (Clean Island) திட்டத்தை நெடுந்தீவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு. நடராசா பிரபாகரன் அவர்கள், நெடுந்தீவுப் பிரதேசத்தின் தற்போதைய தேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரடி கள விஜயம் மேற்கொண்டு, அப்பகுதிகளின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர். இத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, நெடுந்தீவின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் அமைச்சர் வழங்கினார். நெடுந்தீவைத் தூய்மையான, பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரதேசமாக மாற்றுவதுடன், நிலையான அபிவிருத்தியை ஊக்குவித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
<

<

பொதுமக்களுக்கு நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான அரச சேவையை வழங்கும் நோக்கில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உள்ளக அலுவல்கள் பிரிவு (Internal Affairs Unit – IAU) முறைப்பாட்டு பொறிமுறை செயற்பாட்டிலுள்ளது. அரச சேவையில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்,ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் அலுவலக நடைமுறைகளில் காணப்படும் முறைகேடுகள்,பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையில் தாமதமான செயற்பாடுகள்,அதிகார துஷ்பிரயோகம் அல்லது ஒழுக்கமற்ற செயற்பாடுகள் மற்றும் வேறு ஏதேனும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்பாக உங்களிடம் முறைப்பாடுகள் இருந்தால் அவற்றை பிரதேச செயலக உள்ளக அலுவல்கள் பிரிவிற்கு பின்வரும் முறைகளில் அறியத்தரலாம்
📞 தொலைபேசி: 0212215202
📱 WhatsApp: 0766088333
📧 மின்னஞ்சல்: iau.divsdelft@ gmail.com
🌏முகவரி: உள்ளக அலுவல்கள் பிரிவு, பிரதேச செயலகம்,நெடுந்தீவு.
👉 QR Code இனைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.
உங்கள் குரல் மாற்றத்தை உருவாக்கும்! உங்கள் பங்களிப்பு நேர்மையான நிர்வாகத்தை வலுப்படுத்தும்! 🇱🇰ஒரு சிறந்த அரச சேவையை உருவாக்குவதில் பொதுமக்களின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் அவசியமானது. உள்ளக அலுவல்கள் பிரிவு (IAU), பிரதேச செயலகம் - நெடுந்தீவு
<

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம் இன்று (2026.10.15) காலை 10.00 மணிக்கு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. நடராசா பிரபாகரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வருடத்தின் இதுவரை காலம் வரையான நிதி முன்னேற்றங்கள், கணக்காய்வு விடயங்கள் மீதான முன்னேற்றங்கள் மற்றும் எதிர்வரும் காலத்திற்கான திட்டமிடல் முன்னளிப்புகள் என்பன பிரதேச செயலக கணக்காளர் திரு. க.சிறிதரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் குறித்த விடயங்களுடன் தொடர்புடைய ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
<






















