Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குNews & Event.
நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை அனுஸ்ரிக்கும் விதமாக பிரதேச செயலாளர் திரு N பிரபாகரன் அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலக முன்றலில் மரக்கன்று நாட்டப்பட்டதுடன் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பிரதான வீதியில் சிரமதான பணியும் முன்னெடுக்கப்பட்டது.
<
<
நிலையத்தின் இணைப்பாளர் பிருந்தா கந்தையா அவர்களின் தலைமையில் இன்று (30/01/2026) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் ந. பிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு நிலையத்தினூடாக கடந்த வருடம் பாடநெறிகளை பூர்த்தி செய்த 52 மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்து வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
<
<
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது, விழாவுக்கான செலவீன திட்டமிடல், தேவையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டிய நிதி விடயங்கள் தொடர்பிலான ஒழுங்கமைப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் கெளரவ தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, நெடுந்தீவு பிரதேச செயலாளர் திரு. என்.பிரபாகரன், கடற்படை அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.























